(பொன்.நவநீதன்)
மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலகத்தில் காணிப்பிரிவில் கடமையாற்றி வந்த உத்தியோகஸ்தர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய போது கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று (22) கைது செய்யப்பட்ட அவர் எதிர்வரும் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆரையம்பதியைச் சேர்ந்த குறித்த உத்தியோகஸ்தர் நீண்ட காலமாகக் காணி பத்திரம் தொடர்பாக ஆசிரியர்கள் உட்படப் பலரிடம் இலஞ்சம் வாங்கி வந்துள்ளதாகவும், இந்த நிலையில் ஒருவருக்கு அரச காணி ஒன்றைப் பெற்றுத் தருவதாக ஒருவரிடம் 2 லட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவிடம் முறையிட்டதையடுத்து அவர்களின் ஆலோசனைக்கமைய சம்பவ தினமான இன்று பகல் செங்கலடி பிரதேச செயலக காணிப்பிரிவில் வைத்து அவர் கேட்ட 2 லட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கொடுத்தபோது அங்கு இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் குறித்த உத்தியோகத்தை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிறுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 4 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.