மட்டக்களப்பு- அரசடியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு...!!


மட்டக்களப்பு அரசடி அதுரா சிகிச்சை நிலையத்து பின் அறையில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவத்தில் பலத்த சேதம் ஏற்ப்பட்டுள்ளது.

நேற்று (10) மாலை 07.00 மணியவில் சிகிச்சை நிலையத்தை மூடி சென்றபின் எரிவாயூ வெடித்துள்ளதாக முதற்கட்ட விசாராணைகளில் தெரியவந்துள்ளது.

இயங்குநிலையில் இல்லாத எரிவாயூ தீப்பற்றி வெடித்ததன் காரணமாக 3 தண்ணீர் மோட்டர் இயந்திரம் மற்றும் குறித்த அறை கதவு உட்பட்ட பல சேதமடைந்துள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்க்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.