மட்டக்களப்பு-கரடியனாறு, தும்பலாஞ்சோலை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 64 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று அதிகாலை (05) இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
தும்பலாஞ்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தையான கனகன் முருகேன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யானை தாக்குதலில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை
கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.