மூன்று கோடி ரூபாவுக்கு அதிகமான பெறுமதியுடைய 3 கஜ முத்துக்களை தம்வசம் வைத்திருந்த ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 3 கஜ முத்துக்களை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கதிர்காமம், திஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யால தேசிய வனஜீவராசிகள் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.