10 நிறுவனங்கள் உரங்களை இறக்குமதி செய்ய ஓடர்...!!


நாட்டில் உள்ள 10 நிறுவனங்கள் உரங்களை இறக்குமதி செய்ய ஓடர் செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு நிறுவனம் 1,500 மெற்றிக் தொன் யூரியாவை இறக்குமதி செய்வதற்கான ஓடரை வழங்கியுள்ளது என தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே தெரிவித்துள்ளார்.

தோட்டங்களுக்குத் தேவையான இரசாயன உரங்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், மரக்கறி, பழங்கள் மற்றும் அலங்கார மலர்களுக்கு என தேவையான 2,000 மெற்றிக் தொன் உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.