ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது...!!


நிந்தவூர் தியோட்டர் வீதிக்கு அருகாமையில் வைத்து 51,27,18 வயதுடைய பெண் உள்ளிட்ட மூவரை 80 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் மூவரும் நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய சம்மாந்துறை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நபர்களை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.