மட்டக்களப்பு- வவுணதீவில் பாரிய விபத்து- ஒருவர் ஸ்தலத்தில் பலி...!!


மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள வாழைக்காலை சந்தியில் இடம்பெற்ற வான்- மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவரே ஸ்தலத்திலே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

வான் மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்லும்போது எதிரே வந்த மோட்டார் சைக்களிலுடன் மோதுண்டதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.