நாட்டில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திவரும் கொரோனா தொற்று நிலமை காரணமாக மக்கள் ஒன்றுகூடுதல் மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதில் இருந்து விலகி இருக்குமாறு சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக கொவிட் நிலமை வெகமாக அதிகரிக்கும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
வீட்டில் உள்ள சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் தொடர்பில் சிந்தித்து இவ்வாறு செயற்பாடுகளை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை கேள்விக்குறியாக்காத விதத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.