சீமெந்து லொரியை முற்றுகையிட்ட பொது மக்கள்- இறக்காமம் பிரதேசத்தில் பதட்ட நிலை...!!

அம்பாரை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் சீமெந்து ஏற்றி வந்த லொறியை பொதுமக்கள் இன்று (07) முற்றுகையிட்டனர்.


இறக்காமத்தில் உள்ள ஒரு சில கடைகளில் சீமெந்து விலை 1650 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறித்த கடைகளின் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட லொரியை இவ்வாறு பொது மக்கள் வழிமறித்து முற்றுகையிட்டனர்.


குறித்த இடத்திற்கு இறக்காமம் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.ஐ. ஜெளபர் மற்றும் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஜே கலீலுர் ரஹ்மான் ஆகியோர் தலையீடு செய்து குறித்த சீமெந்து பக்கட்டின் விலையை பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 1300 ரூபாய் வீதம் பொதுமக்களுக்கு அவ்விடத்திலே பகிர்ந்தளிக்கப்பட்டது.


நாட்டில் பல பாகங்களில் சிமெண்டின் விலை அதிகரித்து குறைந்த நிலையில் ஒரு சில மாபியா வியாபாரிகள் சீமெந்தினை பதுக்கிய காரணமாக பொதுமக்கள் இவ்வாறு பல இடங்களில் திண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.