சுமார் 229 கிலோ கிராம் எடையுள்ள கேரள கஞ்சா மீட்பு...!!


இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம், அரியாலை கடற்பகுதியில் இன்றைய தினம் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் டிங்கி படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 229 கிலோ கிராம் எடையுள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக இலங்கை கடற்படையினரின் வழக்கமான ரோந்து பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன்படி கடற்படையின் விசேட குழுவினர் இன்று அதிகாலை அரியாலை கடற்பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் டிங்கி படகொன்றிலிருந்து 105 பொதிகளில் அடைக்கப்பட்ட சுமார் 229 கிலோ 350 கிராம் கேரள கஞ்சா அடங்கிய 07 பயணப் பைகள் மீட்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதிய 68 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.