மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுவிற்குட்பட்ட பன்சேனை கிராம வயல் பகுதியில் RPG ஆயுதம் ஒன்று அகப்பட்டுள்ளது.
குறித்த RPG ஆயுதமானது வேளாண்மை பயிர்ச்செய்கைக்காக வயல் நிலங்களை உழவடிக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அகப்பட்டதனையடுத்து பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் ஆயுதத்தை மீட்டு வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு குறித்த ஆயுதத்தினை(RPG) எடுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த ஆயுதம்(RPG) தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.