மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத்மாசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான குழுவினர் இந்த முற்றுகையினை முன்னெடுத்தனர்.
இயந்திரப்படகு மூலம் சென்று முறக்கொட்டாஞ்சேனை ஆற்றுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த பாரியளவில் கசிப்பு உற்பத்தி நிலையத்தினை முற்றுகையிட்டுள்ளர்.
இதன்போது நான்கு பரல்களில் கசிப்பு காய்ச்சுவதறக்காக வைக்கப்பட்டிருந்த 08இலட்சத்து 40மில்லி லீற்றர் கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன் 01இலட்சத்து 65ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை நடாத்திவந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய தோணியொன்றும் மீட்கப்பட்டது.
இதேபோன்று அப்பகுதியில் 15ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு கொண்டுசென்ற ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.