அனைத்து பாடசாலைகளையும் ஆரம்பித்தல் தொடர்பில் வெளியாக்கியுள்ள செய்தி...!!

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவு மற்றும் தரம் 11, 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் சுகாதார பிரிவினர் கலந்தாலோசித்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

COVID தடுப்பு விசேட குழுவுடன் காணொளி தொழில்நுட்பத்தினூடாக இன்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.