மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுக்கான தளபாட உபகரணங்கள் நேற்று(29) மட்டக்களப்பு மாநகர சபையினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது மட்டக்களப்பு மாநகரசபையின் பாதீட்டுக்கு அமைவாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவான், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், சனசமூக நிலையங்களின் உறுப்பினர்கள் மற்றும் மாநகரசபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.