ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் கூட்டுறவு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவினால் இந்த செயற்பாடுகள்முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாடெங்கிலும் பால்மா தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தொடர்ச்சியாக பால்மா வகைகளை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 16கூட்டுறவு நிலையங்கள் ஊடாகவும் பால்மா விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு அரசடியில் உள்ள கூட்டுறவு அபிவிருத்தி சபை வளாகத்திற்கு கொண்டுவரப்பட்ட பாலமாக்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 16கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் கூட்டுறவு கூட்டுறவு அபிவிருத்தி சபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 16கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாகவும் நாளை முதல் பால்மா பக்கட்டுகளை பொதுமக்களுக்கு வழங்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தெரிவித்தார்.