மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட் /மமே/கற்சேனை அ.த.க பாடசாலையில் இவ்வருடம் க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உதயகுமார் கல்வி மையத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் நேற்றைய தினம் (04) வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதயகுமார் கல்வி மையத்தின் ஸ்தாபக தலைமைஒருங்கிணைப்பாளர் திரு .ந.உதயகுமார், செயலாளர் திரு.ம.ஜெயக்கொடி,பொருளாளர் திருமதி அனோஜன் விதுசா,முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் உதயகுமார் கல்வி மையத்தின் தலைமை ஆலோசகருமான பா.அரியநேத்திரன், மக்கள் நல இளைஞர் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.வே.அன்பழகன்,பாடசாலை அதிபர் திரு.சிறிதரன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
