சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்க மேற்கொண்ட தீர்மானத்தை அமுலாக்க வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தாம் கவலை அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் வெளியான அறிக்கை தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக ஊடகவியலாளர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.