மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கான அறிவிப்பு


கொவிட்-19 தொற்றைத் தடுக்கும் நோக்கோடு சினோபாம் தடுப்பூசிகள் செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் நிலையில் நாளை தங்களுக்கான தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாதவர்கள் பெற்றுக்கொள்ளமுடியும் என மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் இலவச தடுப்பூசிகள் வழங்கும் நிகழ்வு திராய்மடு, நாவலடி மற்றும் கோட்டைமுனை முதலிய இடங்களிலுள்ள ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையங்களில் நடைபெற்றுவருகின்றன.

குறித்த தடுப்பூசி செலுத்தும் மறுநாள் வியாழக்கிழமைகளில் (05) வழங்கப்படவுள்ளதால் பொதுமக்கள் எதுவத பயபீதியின்றி இலவசமாகப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களில் பொதுப் போக்குவரத்துச் செய்தல்,பொது இடங்களுக்குச் செல்லுதல் மற்றும் வைத்தியசாலைகளை அணுகுவதற்கான ஒரு அனுமதி அட்டையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட அட்டைகள் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.