கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்று வந்த 18 வயதுடைய மாணவன் ஒருவன் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளான்.
கடந்த 10 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத் தப்பட்டதைத் தொடர்ந்து வீட்டில் தங்கியிருந்த மாணவன் கடந்த 14 ஆம் திகதி களுபோவில வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார் என்றும் வைத்தியசாலையில் நோய் தீவிரம் காரணமாக அவருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த மாணவன் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.