பிறந்த சிசுவை கொலை செய்து எறித்த கொடூர தாய்!


திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிறந்த சிசு ஒன்றினை கொலை செய்து எறித்த குற்றச்சாட்டின் பேரில் சிசுவின் தாயாரை இன்று (12) மாலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மத்ரஸா நகர் பேராறு கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேறு ஒரு நபருடன் உள்ள தகாத உறவு மூலம் நேற்றிரவு (11) சிசு பிறந்துள்ளதாகவும்இ பிறந்த சிசுவினை கொலை செய்து எறித்துள்ள நிலையில் அதனை தெரு நாய்கள் கவ்விச் சென்ற நிலையில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் சிசுவினை பிரசவித்த பெண்ணைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனார்.