தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்று அதிகரிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதி மக்களுக்கான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் 5000ரூபா பெறுமதியான நிவாரணம் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதி மக்களுக்கான 5000ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே.கருணாகரனின் வழிகாட்டலில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது சுமார் 150குடும்பங்களுக்கு இன்றைய தினம் 5000ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

கிராம சேவையாளர்,சமுர்த்தி உத்தியோகத்தர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த நிவாரணப்பணியை முன்னெடுத்தனர்.