(ரஞ்சன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சைனாபாம் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாவது தடவையாக சீனோபார்ம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று 12-07-2021 ஆம் திகதி இடம் பெற்றன.
வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் போரதீவுப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் விவேகானந்தராஜா தலைமையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றன.
தடுப்பூசி ஏற்றும் பணியில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தாதியர்கள் முன்முரமாக செயப்பட்டு தடுப்பூசிகள் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் வீதிஅபிவிருத்தி தினைக்களம், வெல்லாவெளி பொலிஸ்,பிரதேசசெயலகம் ,பிரதேசசபை சமூர்த்தி, தபாலகம்,கிராம அபிவிருத்திச்சங்கம் ஆடைத்தொழிச்சாலை, கமநலகேந்திரநிலையம், நீர்பாசன தினைக்களம் மிருக வைத்திய தினைக்களம் போன்ற அரச தினைக்களங்களுக்கு இன்று தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
இன்றைய தினம் இராணுத்தினர் தடுப்பூசி ஏற்றுவதற்கு வருகைதந்தோருக்கான பாதுகாப்பு உதவிகளை வழங்கினர்.