மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது நாளாகவும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை


மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது நாளாகவும் இன்றும் பல்வேறு பகுதிகளிலும் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 7339கொவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் இன்று தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை கலாசார மண்டபத்தில் இன்று காலை முதல் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மாமாங்கம் பொதுச்சுகாதார பரிசோதகர் நிரோசன் தலைமையில் இந்த கொவிட் தடுப்பு ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய தினமும் 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதுடன் பெருமளவானோர் ஆர்வத்துடன் தங்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றிச்செல்வதை காணமுடிகின்றது.