(ரஞ்சன்)
போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஊழியர்கள்,உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு சுகாதார துறையினர் பின்னடித்துவருவது தொடர்பில் கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேசசபையின் 41வது அமர்வு இன்று சுகாதார நடைமுறைகளை பேணியவாறு நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் பிரதேசசபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக அமர்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்று அதிகரித்துச்செல்லும் நிலையில் அவற்றிலிருந்து மக்களை பாதுகாக்கவேண்டி சுகாதார துறையினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கிவரும் நிலையில் இன்றைய நிலையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளில் பிரதேசசபையினை புறக்கணிப்பதாகவும் பிரதேசசபையின் ஊழியர்கள் உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரையில் தடுப்பூசி ஏற்றப்படாமல் உள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
பிரதேசசெயலக உத்தியோகஸ்தர்கள் 184 பேருக்கும் ஆரையம்பதி ஆடைத்தொழிச்சாலை ஊழியர்களுக்கு 121 பேருக்கும் பிரதேசசபை 46 பேருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் சபையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
கொவிட் 3வது அலையின் காரனமாக ஆடைத்தொழிச்சாலை ஊழியர்கள் ஊடாக வெல்லாவெளி சுகாதார வைத்திய பிரிவில் அதிகளவான கொரனா தொற்றாளர்கள்இனங்கானப்பட்டதனை தொடர்ந்து போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி செயலாளர் பா.சதிஸ்கரன் ஆகியோர்களின் பணிப்புக்கமைவாக பிரதேசசபை வாகனங்கள்,பிரதேசசபை ஊழியர்கள் இனைந்து பொதுச்சுகாதார வைத்தியரின் வேன்டுகோளுக்கு அமைவாக பொதுச்சுகாதார பரிசோதர்களின் விடாமுயற்சியினால் அன்ரிஜன் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொன்டு மட்டக்களப்பு ஆடைத்தொழிச்சாலை கொவிட் கொத்தனியை கட்டுப்படும் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.
இதேபோன்று பிரதேச சபையினால் கொவிட் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதி திண்மக்கழிவுகள் எடுத்தல் மரணம் ஏற்பட்டால் இலவச அமரர் ஊர்தி சேவை தெரு விளக்கு போடுதல் போன்ற பணிகளை கொவிட் காலத்தில் மேற்கொள்ளும் போது ஏன் பிரதேசசபையினை கொவிட் தடுப்பூசி வழங்குவதில் புறக்கனிக்கப்படுகின்றனர் எனவும் சபையில்கேள்வியெழுப்பப்பட்டது.
பழுகாமம் வட்டார உறுப்பினர் சு.விக்கினேஸ்வரன் இது தொடர்பில் கடுமையான தனது கருத்துகளை சபையில் முன்வைத்ததுடன் எமது பிரதேசத்தில் பிரதேசசபை ஊழியர்கள்,உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டாமை பாரபட்சமாக செயற்பாடு எனவும் இதனை வன்மையாக கன்டிப்பதாகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயப்பாடு இடம்பெறக்கூடாது என சுட்டிக்காட்டப்பட்டனார்.
போரதீவுப்பற்று பிரதேசசபையானது வருமானம் வருவது குறைவாக இருந்தாலும் மக்களுக்கு சேவையினை ஒழுங்கான முறையில் செய்து வருகின்றது.
அந்த வகையில் குடிநீர் வினியோகம் திறம்பட வறட்சி காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றனர.; அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் குடிநீர் குளாய் இணைப்பு மூலம் திக்கோடை வீட்டுத்திட்டங்கள்,இளைஞர் விவசாயத்திட்டம்,40ம் கிராமம் தும்பங்கேனி ஆகிய கிராமங்களுக்கு நீர் வினியோகம் குளாய் இனைப்பு மூலம் வழங்கப்படுகின்றமை மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேசசபை மட்டுந்தான் என தவிசாளர் சுட்டிக்காட்டினார்.
இன்றைய அமர்வின்போது பல்வேறு விடயங்கள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டதுடன் பல பிரச்சினைக்கான தீர்வுகளும் வழங்கப்பட்டன.