பயணக் கட்டுப்பாடுகளை மேலும் அமுல்படுத்துங்கள்: விஷேட மருத்துவர்கள் சங்கம்


தற்போது அமுலிலுள்ள பயணக் கட்டுப்பாடுகளை மேலும் நடைமுறைப்படுத்துமாறு விஷேட மருத்துவர்கள் சங்கம் அரசாங்கத்தைக் கோரியுள்ளது. 

கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 12 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 28 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

மேலும் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் மருத்துவமனை பொறிமுறையால் இந்த அதிகரிப்பை சமாளிக்க முடியாது எனவும் விஷேட மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ளது. 

தடுப்பூசித் திட்டத்தை கூடுதலாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அச்சங்கம் கூறியுள்ளது. 

மேற்படி காரணங்களைக் குறிப்பிட்டு விஷேட மருத்துவர்கள் சங்கம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றைக் கையளித்துள் ளதாகவும் தெரியவருகிறது.