வரையறுக்கப்பட்ட தபால் சேவைகள் நாளை முதல் ஆரம்பம்


நாளை முதல் தபால் மற்றும் உப தபால் அலுவலகங் களைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ஜூன் மாதத்துக்கான பொதுக் கொடுப்பனவு மற்றும் மருந்துகள் விநியோகம் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட கடமைகளுக்காக தபால் நிலையங்கள் திறக்கப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன தெரிவித்தார். 

பாதுகாப்புப் படையினரிடம்இ தொடர்புடைய கொடுப்பனவு அட்டை அல்லது அடையாள அட்டையைக் காண்பித்து தபால் அலுவலகம் அல்லது உப தபால் அலுவலகத்தை நாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலணி ஆகியவற்றின் வேண்டுகோளின் படி அரச மருத்துவமனைகளிலுள்ள கிளினிக்குகளிலிருந்து வீடுகளிலுள்ள நோயாளிகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் பணி நாளை முதல் ஆரம்பமாகும் என தபால் மா அதிபர் கூறினார். 

இது தொடர்பாக ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால், 1950, அழைப்பதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெறலாம் என்று தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.