நாட்டில் கொரோனா தொற்று பரவல் ஆபத்தான நிலையில் காணப்படுவதால் நாட் டை 14 நாட்களுக்கு முடக்கவோ அல்லது கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடு களை விதிக்கவோ நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை மருத்துவர் கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது. இந்நிலையில், நாடுமுழுவதும் தொடர்ச்சியாக 14 நாட்களுக்குக் கடுமையான பயணக் கட்டுப் பாடுகள் விதிக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்ம குணரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வைத்திய வசதி குறைவாகக் காணப்படுவதால் பி.சி.ஆர்.பரிசோதனை மிக விரைவாக அரசாங்கத்தால் மேற்கொள்ள முடியாமல் உள்ளமையால் அதன் அறிக்கை தாமதமாக வெளியாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்டு 7 நாட்களுக்குப் பிறகு தான் கிராம சேவை பிரிவுகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் கொரோனா தொற்று மிகவும் விரைவாகப் பரவக் கூடிய தன்மை காணப்படுவதால் 07 நாட்களுக்குப் பின்னர் கிராம சேவைப் பிரிவுகளில் போக்கு வரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் கொரோனா தொற்று நிலைமையை கட்படுத்த முடியாது.
அத்தோடு, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மூன்று நாள் ஊரடங்கு உத்தரவு விதிப்பது போதுமானதாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பயனற்றது என்றும் ஏனெனில் பொதுமக்கள் மீண்டும் ஒன்று கூடினால் புதிய தொற்றை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது.
எனவே நாட்டை 14 நாட்களுக்கு முடக்கவோ அல்லது கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்கவோ நடவடிக்கை எடுக்கவேண்டும் என வைத்தியர் பத்ம குணரத்ன தெரி வித்துள்ளது.
