கரவெட்டியில் சமூர்த்திவங்கி ஏற்பாட்டில் மாபெரும் விற்பனைச் சந்தை!

 


(லக்ம‌ஷன்)
மட்டக்களப்பு  மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவினால் கரவெட்டி வலய வங்கியால் நடாத்தப்பட்டு வருகின்ற சமுர்த்தி மாபெரும் விற்பனைச் சந்தை இன்றைய தினம் (ஆயித்தியமலை) (07.04.2021 ) காலை 9.30 மணியளவில் முகாமையாளர் திருமதி P.அசோக்குமார் தலைமையில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் திரு சி. சுதாகரன் உதவி பிரதேச செயலாளர் திருமதி சு. சதாகரன் அவர்களும் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் க. தஙகத்துரை தலைமை முகாமையாளர் எஸ். வாமதேவன் சமுர்த்தி முகாமையாளர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்றோர் இணைந்து வைபவ ரீதியாக நாடவை வெட்டி சந்தையினை ஆரம்பித்து வைத்தனர். 
நாளையும் சந்தை நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.