'சமுர்த்தி அபிமானி' மாபெரும் விற்பனை சந்தை


 ( சர்ஜின் )

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகி வரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ஒரே கூரையின்  கீழ் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

இதன் அடிப்படையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து  ஏற்பாடு செய்த 'சமுர்த்தி அபிமானி' விற்பனை சந்தையின்  இன்றைய தினம் (2021.04.08) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது எருவில் சமுர்த்தி வங்கி ஏற்பாடு செய்த விற்பனை சந்தையானது  ஒந்தாச்சிமடம் விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில்  ஆரம்பித்து வைக்கப்பட்ட விற்பனை சந்தையின்  அங்குரார்ப்பண நிகழ்வில் மட்டக்களப்பு மாவடட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி அமிர்தகலாதேவி பாக்கியராசா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்     தலைமையக முகாமையாளர் திருமதி P. ஜீவகுமார் , முகாமைத்துவ பணிப்பாளர் திரு K . உதயகுமார், எருவில் சமூர்த்தி வங்கி முகாமையாளர்  பா. துரைராஜாசிங்கம், கிராம உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  மற்றும் சமுர்த்தி பயனாளிகள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் வரவேற்கப்பட்ட அதிதிகள் வியாபார நிலையங்களை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து பொருட்களை பார்வையிட்டதுடன் கொள்வனவிலும் ஈடுபட்டனர்.

இங்கு சமுர்த்தி பயனாளிகளால் உற்பத்தி செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி பொருட்கள்  குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் இவ் விற்பனை சந்தையானது தொடர்ச்சியாக நாளைய தினமும் இடம்பெறவுள்ளது. மேலும் கல்லாறு மற்றும் மாங்காடு சமுர்த்தி வங்கிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட விற்பனை சந்தைகளானது அதிதிகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .