எருவிலில் விசேட தேவையுடைய குடும்பத்திற்கு வீடு அமைத்துவழங்கப்பட்டது


(ரஞ்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எருவில்  கிராமத்தில் மிகவும் வறுமைக்கோட்டுக்கு இரண்டு விசேட தேவையுடைய சகோதரர்கள் வாழ்கின்ற  குடும்பத்துக்கு வீடு ஒன்று அமைத்துவழங்கப்பட்டள்ளது.

எம் கடமை உறவுகள் அமைப்பினால் இந்த வீடு அமைக்கப்பட்டு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டில் வாழும்  கதிர்காமநாதன்- அருளம்பலம் ஆகியோரின் முழு நிதி பங்களிப்புடன் வீடு கட்டுவதற்கான முழு கட்டுமான பணிகளையும்  எம் கடமை உறவுகள் அமைப்பு முன்னெடுத்தது.

குறித்த வீட்டினை இன்று குடும்பத்தரர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் எம் கடமை உறவுகள் அமைப்பின் உறுப்பினர்களான சு.பரமேஸ்வரன்,ஆர்.துஷாந்,பி.புஸ்பநாதன் ஆகியோர் இந்த வீடமைக்கும் பணிகளை முன்னெடுத்து வழங்கிவைத்தனர்.