மண்முனை வடக்கு பிரதேச செயலகம் ஊடாக 5000ரூபா வழங்கும் செயற்பாடு


கொரனா அச்சுறுத்தல் காரணமாக தொழில்வாய்ப்புகள் இழந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் 5000ரூபா வழங்கும் வேலைத்திட்டம் இன்று நாடளாவிய ரீதியில் சமுர்த்தி வங்கி ஊடாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் மற்றும் கௌரவ பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர்  பசில் ரோகன ராஜபக்ஷ ஆகியோரின் எண்ணக்கருவுக்கு அமைவாக இந்த நிதியுதவி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள சமுர்த்தி வங்கி ஊடாக இந்த 5000ரூபா கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்றுவருகின்றன.

பிரதான நிகழ்வு ஊரணி சமுர்த்தி வங்கியில் இன்று காலை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வறிய நிலையில் உள்ள 9000குடும்பங்களுக்கு 5000ரூபா நிதியுதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

விசேட தேவையுடையோர்,வருமானம் குறைந்தோர்,குடும்பம் தலைமைதாங்கும் பெண்கள் என ஏழு பகுதியானவாகளுக்கு இந்த நிதிதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.