மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கடந்த ஆண்டு மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 32 வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 20 கொன்றிட் வீதிகளும், 12 காபட் வீதிகளும் மழை காரணமாக முடிக்கப்படாத வேலைத்திட்டங்களாக உள்ளன.
குறித்த வேலைத்திட்டங்கள் தற்போது முடித்து வைத்த பின்னர் இந்த ஆண்டுக்கான அடுத்த செயற்திட்டங்களை அமுல்படுத்த மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களால் பணிக்கப்பட்ட நிலையில் குறித்த வேலைத்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில், கௌரவ உறுப்பினர் சிறீஸ்கந்தராஜா இசை நடனக் கல்லூரி குறுக்கு வீதியினை புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த ஆரம்ப நிகழ்வில், குறித்த வட்டார உறுப்பினர் திரு.சிறீஸ்கந்தராஜா, மாநகர உறுப்பினர்களான ஜெயா, இராஜேந்திரம், சூட்டி ஆகியோர் கலந்து கொண்டு வீதியின் ஆரம்ப வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்.
குறித்த வீதியானது நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் மக்கள் போக்குவரத்துச்செய்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவந்த நிலையில் குறித்த வீதியின் புனரமைப்பு நடாத்தப்பட்டுள்ளது.ள
இதன் போது மாநகர முதல்வரால் ஒழுங்கு முறையில் வேலைத்திட்டங்களை விரைவாக நிறைவேற்றும்படி முதல்வரினால் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.