(புருசோத்)
இலங்கை திருநாட்டில் கிழக்கிலங்கையில் திருக்கோவில் பிரதேசத்தில் தாமரைக்குளம் என்னனும் இடத்தில் இலங்கை ஷீரடி என அழைக்கப்படும் ஷீரடி சாய் கருணாலயத்தில் பங்குனித் திங்கள் 29ந்திகதி சாய்நாதர் பிரதிஷ்டை செய்யப்பட்டு (1.04.2021)அன்று வியாக்கிழமை பால் காப்பு இடம்பெறும்.
பிரதிஸ்டா கும்பாபிஷேகத்தை தெடர்ந்து 48 நாட்களுக்கு தினமும் காலை 9.00 மணிக்கு மண்டலாபிஷேக புஜையும் அதனை தெடர்து சாய்நாதருக்கு மங்கள ஆராத்தியும் நடைபெறும்
அதன் பின்னர் ஷீரடி சாய் கருணாலய கீதங்கள் இறுவெட்டு வெளியிடப்படும்் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் அவர்களின் இசை வடிவிலும் ஶ்ரீமதி சீதா விவேக் , நிறோஷ் ஞானச்செல்வம்்இவர்களின் பாடல் வரிகளுடனும் உருவாக்கப்பட்டது்் பிரதம அதிதிகளாக கெளரவ கலாநிதி ,எந்திரி சுரேஸ் பொன்னையா ( முன்னாள் புனர்வாழ்வு , மீள்கட்டுமானம், வடமாகாண அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சு ).
மயூரன் நாகலிங்கம்( பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மட்டக்களப்பு), தங்கையா கஜேந்திரன் (பிரதேச செயலாளர் திருக்கோவில்) ,மற்றும் மேலும் சிறப்பு அதிதிகளுடனும் ஶ்ரீல ஶ்ரீ சிவசங்கர் குரூஜி் (அகில உலக மகா சித்தர்கள் அறக்கட்டளை ஆலோசகர், பனராஷ் இந்து பல்கலைக்கழகம் வாரணாசி) ஆகியோரின் ஆசிர்வாத்த்துடனும் வெளியிட்டு வைக்கப்படும்் சாய் பக்தர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்


