மிகவும் பின்தங்கிய பகுதி மக்களுக்கு உதவிய சுவிஸ் உதயம் அமைப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் உள்ள வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கு பாதனிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

கரடியன்குளம் மிகவும் பின்தங்கிய மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் மக்கள் வாழும் பகுதியாகும்.

இப்பகுதியில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரும் நிலையில் பாடசாலையானது ஒரு தனி அறையில் நடைபெற்றுவருகின்றது.

இப்பகுதி மக்களின் தேவைகள் குறித்து சுவிஸ் உதயம் அமைப்பின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து முதல் கட்டமாக அக்கிராமத்தில் உள்ள 55 குடும்பங்களுக்கு உலர் உணவுகள் வழங்குவதற்கும் அங்குள்ள பாடசாலையில் கல்வி பயிலும் 33மாணவர்களுக்கு பாதணிகள் வழங்குவதற்குமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட.

இதனை மாணவர்களுக்கும் குறித்த கிராம மக்களுக்கும் வழங்கும் நிகழ்வு இன்று கிழக்கு சுவிஸ் உதயம் அமைப்பின் உப செயலாளர் திருமதி செல்வி மனோகரின் ஏற்பாட்டில் தலைவர் கே.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் சுதர்சன் தேவசகாயம் அவர்களி;ன் இரண்டு பிள்ளைகளின் அனுசரணையுடன் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது குறித்த கிராமத்தில் வாழும் 55 குடும்பங்களுக்கும் உலர் உணவுகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் குறித்த கிராமத்தில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் 33மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், சுவிஸ் உதயம் அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.