சித்தாண்டியில் எதிர் கால கல்வி மான்களை கௌரவிக்கும் நிகழ்வு

 



சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய முன்றலில் (21. 02. 2021)  காலை 9.31 மணிக்கு நாடை பெற்றது. 

இந் நிகழ்வை சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய நிருவாகமும் சித்தாண்டி சிகண்டி பவுண்டேசன் அமைப்பும் இணைந்து நாடாத்தியது. இந் நிகழ்வுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு .யோகேஸ்வரன் ஐயா,செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகார் வைத்தியர் ஸ்ரீநாத் செலிங்கோ பிராந்திய முகாமையாளர், ஏறாவுர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஏறாவுர்ப் பற்று வேள்விஷன் லங்கா திட்ட முகாமையாளர்சட்டத் தரணி திருமதி மயூரி ஜனகன் சித்தாண்டி முருகன் ஆலய தலைவர் திரு சி. பாலச்சந்திரன் ஓய்வு நிலை அதிபர் திருமதி தேவராஜா ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் திருமதி யோகேஸ்வரி. ஆலய நித்திய குரு வசந்த ஐயா அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர். 

இந் நிகழ்வில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த 15 மாணவர்களும் , பல்கலைக் கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 17 மாணவர்களும் ( மருத்துவம் பீடம். உயிரியல் விஞ்ஞானம்பௌதீக விஞ்ஞானம். வர்த்தக பீடம். கலைப் பீடம்தொழில் நுட்ப பீடம்) கௌவரவத்தை பெற்றுக் கொண்டனர்.