அரியநேத்திரனிடம் பொத்துவில் பொலிசார் வீடு தேடி சென்று விசாரணை!


(லக்‌ஷன்)

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடகச்செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான பா.அரியநேத்திரனிடம் பொத்துவில் பொலிசார் வீடுசென்று விசாரணை மேற்கொண்டனர்.  

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையுமான பேரணியில் கடந்த 02/02/2021 கலந்து கொண்டமை தொடர்பாக அரியநேத்திரனின் அம்பிளாந்துறை வீட்டிற்குச்சென்ற பொலிசார் இன்று 21/02/2021, காலை 9.30, மணிக்கு சென்ற பொலிசார் வாக்குமூலம் பெற்றுச்சென்றனர். 

வாக்குமூலத்தின்போது அரியநேத்திரன் தமக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையும் இடம்பெற்ற பேரணியில் தாம் கலந்துகொண்டது உண்மை எனவும் தமக்கு பொலிசாரால் எந்த இடத்திலும் நீதிமன்ற தடைஉத்தரவு தரப்படவில்லை எனவும் கூறினார். 

 இதேவேளை கடந்த 19/02/2021 மட்டக்களப்பு பொலிசாரும் இவ்வாறு வாக்குமூலம் பெற்றுச்சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.