நாவற்காடு நாமகள் வித்தியாலய ஒன்றுகூடல் முற்றத்திற்கான மணல் நிரப்பும் வேலைத்திட்டம்


மட்/மமே நாவற்காடு நாமகள் வித்தியாலய காலை ஒன்றுகூடல் முற்றத்திற்கான மணல் நிரப்பு வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல காலமாக மழைகாலங்களில் ஒன்றுகூடல் முற்றத்தில் நீர் தேங்குகின்றமையால் அங்கு காலை மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வினை நடத்துவது சிரமமாக இருந்தது.

குறித்த பிரச்சினையினை அவதானித்த பாடசாலை அபிவிருத்தி குழுவினர் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் தற்போது உழவு இயந்திரங்கள் மூலம் மணல் நிரப்பும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்

பாடசாலை அதிபர் தி.தியாகரெத்தினம் அவர்களின் தலைமையில் 

மாணவர்களின் பெற்றார்களது உழவு இயந்திரங்களின் உதவியுடன், எரிபொருள் செலவினை நாவற்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நிருவாகத்தினர் வழங்க பழைய மாணவர்கள் இச் செயற்திட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.