உணர்வுகளை தட்டியெழுப்பும் மட்டக்களப்பு கலைஞர்களின் “மாயைமற”


மட்டக்களப்பு மாவட்டத்தின் கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட “மாயைமற” என்னும் குறுந்திரைப்படம் நேற்று மாலை திரையிடப்பட்டது.

மட்டக்களப்பு,மாங்காடு.திபேஸ் திரையரங்கில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.

முரளிதரனின் தயாரிப்பிலும் கோடீஸ்வரனின் இயக்கத்திலும் உருவான இந்த திரைப்படம் பெரும் வரவேற்புக்கு மத்தியில் திரையிடப்பட்டது.

சமூகத்தில் இளைஞர் யுவதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்பொருளாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் அனைவரது உள்ளத்தினையும் நெருடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

முரளிதரனின்  விஸ{வல் ஆர்ட் மூவிஸின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த குறுந்திரைப்படம் வெளியிடப்பட்டபோது பெருமளவானோர் குறித்த திரைப்பட வெளியீட்டு நிகழ்வுக்கு வருதைந்து பார்வையிட்டதை காணமுடிந்தது.

இளைஞர் யுவதிகளின் இன்றைய போக்கினை சித்திரிக்கும் இந்த திரைப்படத்தினை கட்டாயம் இளைஞர் யுவதிகள் பார்க்கவேண்டிய ஒன்றாக உள்ளது.

மட்டக்களப்பின் கலைஞர்கள் முற்றுமுழுதாக நடித்துள்ள இந்த குறுந்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் புதுமுக நடிகர்களாக உள்ளபோதிலும் அவர்களின் நடிப்பு அனைவரும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.