செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் வரலாறு அறிவுச்சுடர் நூல் வெளியீட்டு விழா!

 


மட்டக்களப்பு கல்குடா செங்கலடி விவேகானந்தா வித்தியாலய ஆசிரியர் சி.சிவதனேஸ் அவர்களினால் எழுதப்பட்ட வரலாறு அறிவுச்சுடர் நூல் வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது.

செங்கலடி விவேகானந்தா வித்தியாலய பிரதான மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் கி.சிவலிங்கராஜா அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

வரலாறு அறிவுச்சுடர் நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக கல்குடாகல்வி வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.தி.ரவி அவர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், கௌரவ  அதிதியாக ஏறாவூர்02 கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.சதட்சணாமூர்த்தி அவர்களும், சிறப்பு அதிதியாக கல்குடாகல்வி வலய சேவைக்கால ஆலோசகர் திரு.த.அகிலன் மற்றும் திரு.ப.நல்லரெட்ணம் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன் ஓய்வுபெற்ற அதிபர்கள், பாடசாலையின் ஆசிரிய மாணவர்கள் , பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தினர்,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அதிதிகள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டதுடன் மங்கல விழக்கேற்றல், அதிகிகள் உரை என்பனவும் இடம்பெற்றதுடன்.

குறிப்பாக இன்றைய நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடாகல்வி வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.தி.ரவி அவர்களுக்கு நூலின் முதலாவது பிரதியை நூலின் ஆசிரியர் சி.சிவதனேஸ் அவர்கள் வழங்கி வைத்ததுடன் அனைத்து அதிதிகளுக்கு நூல் வழங்கப்பட்டன. 

இதே வேளை நூலின் ஆசிரியர் சி.சிவதனேஸ் அரவர்கள் பொன்னாடை அணிவித்து  கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.