மெதடிஸ்த மத்திய கல்லூரியின் (2007 O/L, 2010 A/L) பழைய மாணவர் வலையமைப்பினரால் க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான கருத்தரங்கு


‘OLD BOYS NETWORK’ ஆனது பாடசாலை மாணவர்கள் மட்டத்திலான செயற்பாடுகளை மேற்கொள்ளும் முயற்சியில் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்ட மேற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடநெறிகளுக்காக இலவச  கருத்தரங்குகளை ஆரம்பித்துள்ளனர். 

அதன் முதற்கட்டமாக அந்த வலயத்திற்குட்பட்ட 17 பாடசாலைகளை சேர்ந்த 348 மாணவர்களுக்கான கருத்தரங்கு மட்/ மேற்கு கல்வி வலயத்தின் ஆலோசனையின் கீழ் ‘OLD BOYS NETWORK’ இன் ஏற்பாட்டிலும் அனுசரணையிலும் கடந்த 07/02/2021 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை தெரிவுசெய்யப்பட்ட 3 நிலையங்களில் (மட்/ கன்னங்குடா மகா வித்தியாலயம், மட்/கரடியனாறு மகா வித்தியாலயம், மட்/ நாவற்காடு நாமகள் வித்தியாலயம்) இடம்பெற்றது. 

இந்த கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் ‘OLD BOYS NETWORK’ சார்பில் மஞ்சரகோபன், அஜித்குமார், நிதர்சன், நிஹால், யதிஸ்வரன், திவாகரன், புஜேந்திரன், அனோஜன், தவேஸ்கர், சசிகுமார் ஆகியோரும் வலயக்கல்வி அலுவலகம் சார்பாக அதிகாரிகளும், சில பாடசாலைகளின் அதிபர்களும்  கலந்து கொண்டிருந்தனர். 

இந்த கருத்தரங்கின் வளவாளர்களாக ஆசிரியர் தர்ஷன், ஆசிரியர் இளங்கீரன், ஆசிரியர் அகிலராஜ், ஆசிரியர் கிந்துஜன் கலந்து கொண்டிருந்தனர். 

இதன் அடுத்த கட்ட மாணவர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் 14/02/2021 (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.