உதவும் கரங்களின் புதுவருட நிகழ்வு


புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தாய்தந்தையர்களை இழந்த சிறுவர்களுக்கும் வறுமை நிலையில் உள்ள சிறுவர்களுக்கும் கல்வியை வழங்கிவரும் மட்டக்களப்பு மயிலம்பாவெளி உதவும் கரங்கள் இல்லத்தின் ஏற்பாட்டில் புத்தாண்டு நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

உதவும் கரங்கள் இல்லத்தில் அதன் தலைவர் ச.ஜெயராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உதவும் கரங்கள் அமைப்பின் ஸ்தாபக தலைவர் அமரர் அன்டன் ஞானமுத்து அவர்களின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டதன் பின்னர் புதுவருட நிகழ்வுகள் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தாய்தந்தையர்களை இழந்த சிறுவர்களுக்கும் வறுமை நிலையில் உள்ள 70க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இங்கு தங்வைக்கப்பட்டு கல்வி வழங்கப்படுகின்றது.

இவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இன்றைய புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர்ப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி த.ராஜமோகன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது புதுவருட கைவிசேடம் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்,புத்தாடைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஏறாவூர்ப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி த.ராஜமோகன் இல்லத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் ஆசிரியர் திருமதி பிரியா கருணாகரன் உட்பட பலர் கலந்துகொண்டதுடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

கொரனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நெறிமுறைகளை பின்பற்றியவாறு நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.