(ரஞ்சன்)
இன்றைய காலத்தில் இளைஞர்கள் மத்தியில் சமூக அக்கரையும் பொதுநலம் நோக்க சிந்தனையும் குறைந்துவரும் நிலையில் அவற்றினை பொய்யாக்கும் வகையில் இளைஞர்கள் முன்னெடுத்த செயற்பாடு அனைவரது பாராட்டுகளையும் பெற்றள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை தீர்க்கும் வகையில் இரத்தானமுகாம் ஒன்று இளைஞர்களின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.
திருப்பழுகாமத்தின் இளைஞர்களின் ஏற்பாட்டில் உதிரம் கொடுத்து உயிர்காப்போம் எனும் தொனிப்பொருளின் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.
திருப்பழுகாமம் இளைஞர்களின் பங்களிப்புடன் மட்டக்களப்பு போதனா வைத்தியாலையினால் இங்கு இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டது.
இந்த இரத்ததான முகாமில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தார்.
அத்துடன் பெருமளவான இளைஞர்களும் இதன்போது இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரனா அச்சுறுத்தல் காரணமாக பாரியளவில் இரத்தப்பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் அவற்றினை நிவர்த்திக்கும் வகையில் இரத்ததான முகாம்கள் நடாத்தப்பட்டுவருகின்றது.









