மயிலத்தமடு கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இடிக்கு மேல் இடிவிழும் நிலை


சீரற்ற வானிலை காரணமாக  மட்டக்களப்பு செங்கலடி செயலாளர் பிரிவுக்குட்பட்ட  மயிலத்தமடு மற்றும் மாதவனை  பகுதியில்  நேற்றிரவு பெய்த இடியுடன் கூடிய மழை காரணமாக கால்நடை பணியாளர்களின் 09 பசுமாடுகள் இடி மின்னல் தாக்கம் காரணமாக  உயிரிழந்துள்ளது.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  பேரில்லாவெளி பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி பஞ்சாயுதம் நான்கு பிள்ளைகளின் தந்தை  என்பவரின் மாடு எவ்வாறு உயிரிழந்துள்ளது .

நேற்று பிற்பகல் வேளையில் இருந்து இடியுடன் கூடிய மழை குறித்த பகுதியில் பெய்தது. பஞ்சாயுதம் என்பவருக்கு சுமார் 150 மாடுகள் உள்ளது.

இடிமின்னல் காரணமாக  தனது பட்டியில்  அடைக்கப்பட்ட  மாடுகள் மீது மின்னல் தாக்கி இதன் காரணமாக  உயிரிழந்துள்ளது.நேற்று மாலை வேளையில் மாடுகளை அடைத்துவிட்டு  இன்று காலையில்  சென்று பார்க்கின்ற நிலையில்  சுமார் ஒன்பது மாடுகள் இறந்து காணப்பட்டதாக  பண்ணையாளர் பஞ்சாயுதம் தெரிவித்தார்.

மயிலத்தமடு மாதவனை பகுதியில்  மகாவலி அதிகார சபையினால்  சோளப் பயிர் செய்கைக்கு  மேச்சல் தரைப்பகுதி  வழங்கப்பட்டு இருப்பதன் காரணமாக  தற்பொழுது அப்பகுதியிலிருந்து பண்ணையாளர்கள் அனைவரும் வெளியேறிய நிலையில்

தொப்பிகள், மியான்கல் குளம், தரவை, குடும்பிமலை,  ஈரலக்குலம்  போன்ற பகுதிகளில் தற்பொழுது கால்நடைகளை  கொண்டு வந்துள்ளனர். இடி மின்னல் தாக்கம் காரணமாக உயிரிழந்த மாடுகளை  பண்ணையாளர்கள் குறித்த இடத்தில் குழிதோண்டி புதைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக  உரிமையாளர்  கரடியனாறு மிருக வைத்தியசாலை வைத்திய அதிகாரியிடம்  அப்பகுதி கிராமசேவகர் இடமும்  கரடியனாறு போலீசாரிடமும்  தெரியப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

இம்முறை தங்களுடைய கால்நடைகளை வளர்க்க முடியாத நிலைமையில் அப்பகுதியில் இருந்து வெளியேறிய தாங்கள்  இவ்வாறான நிலைமை காரணமாக தங்களுடைய பொருளாதாரமும் வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.