சுனாமி ஞாபகார்த்த நிகழ்வும் மாணவர்கள் கௌரவிப்பும்


சுனாமியின் ஆகோர தாக்கம் ஏற்பட்டு 16ஆண்டுகள் நினைவு தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

கல்லடி கடல்மீன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கல்லடி பாலம் அருகில் சுனாமி நினைவு நிகழ்வும் மாணவர்கள் கௌரவிப்பும் நடைபெற்றது.

கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள சுனாமி நினைவுத்தூபியில் சுனாமியில் உயிர்நீர்த்தவர்கள்வர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணை தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.

இதன்போது உயிர்நீர்த்தவர்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் சாதனை படைத்த வின்சன்ட் பெண்கள் உயர் பாடசாலையின் மாணவி சிறிசங்கர் பவிநயாக உட்பட 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் கல்விக்கான உதவிகளும் வழங்கப்பட்டன.