காத்தான்குடி நபருக்கு கொவிட் தொற்று


மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் நேற்றுஇரவு காய்ச்சல்காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட காத்தான்குடியைச்சேர்ந்த 55வயது நபரொருவருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
களுத்துறையிலிருந்து காத்தான்குடிக்கு வந்து கொண்டிருந்த போது காத்தான்குடிக்கு செல்லாமல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேரடியாக சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் இவருக்கு நடாத்தப்பட்ட பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்
காத்தான்குடியில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளதுடன். இதில் ஒருவர்(முதல் நபர) சுகமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
எம்.எஸ்.எம்.நூர்தீன்