மட்டக்களப்பிலும் ஒருவருக்கு கொரனா – எச்சரிக்கை விடுக்கும் சுகாதார பிரிவினர்

மட்டக்களப்பு நகரில் ஒருவருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள ஒருவருக்கே கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் செங்கலடியில் உள்ள வர்த்தக நிலையத்தில் கடமையாற்றுவதாகவும் அங்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையிலேயே இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் தேவையற்ற வகையில் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.