மாவட்டத்திற்குள் வருவோர் தீவிர கண்காணிப்பு –மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள வேண்டுகோள்


மட்டக்களப்பு எல்லைப்பகுதி ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் நுழையும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் சுகாதாரதுறை சார்ந்த உத்தியோகத்தரும்,பிரதேச செயலகம் சார்ந்த ஒரு உத்தியோகத்தரும் பொலிஸாருடன் இணைந்து கடமையில் ஈடுபட்டு மாவட்டத்திற்குள் வருவோர் தொடர்பிலும் வெளிச்செல்வோர் தொடர்பிலும் தீவிர கண்காணிப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

கொரனா தொற்றினை தடுப்பதற்கு கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள கிராமிய குழுக்களுக்கு விசேட பயிற்சி சுகாதார துறையினரால் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கொவிட் தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர் உள்ள பகுதிகளில் ஸடிக்கர் ஒன்றினை ஒட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இலகுவில் அவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பல கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி இந்த தொற்றினை கட்டுப்படுத்துவது கடினம் என தெரிவித்த அவர்,வெளி மாவட்டத்தில் இருந்துவரும் இந்த மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் அவர்களின் குடும்பத்தினர் 14நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கி;றேன்.

மட்டக்களப்பு எல்லைப்பகுதி ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் நுழையும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் சுகாதாரதுறை சார்ந்த உத்தியோகத்தரும்,பிரதேச செயலகம் சார்ந்த ஒரு உத்தியோகத்தரும் பொலிஸாருடன் இணைந்து கடமையில் ஈடுபட்டு மாவட்டத்திற்குள் வருவோர் தொடர்பிலும் வெளிச்செல்வோர் தொடர்பிலும் தீவிர கண்காணிப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.