மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்


மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராகபொது நிர்வாக மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சால் நியமனம்பெற்றுள்ள கே.கருணாகரன் இன்று தனது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றார்.

களுதாவளையை சேர்ந்த கணபதிப்பிள்ளை கருணாகரம் இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்தவரான இவர் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய நிலையிலேயே மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமனம்பெற்றுள்ளார்.

இன்று காலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றும் அரசாங்க அதிபருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்தவருக்கு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்தா தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலாளர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.

வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டதை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் கடமைகளைப்பொறுப்பேற்றார்.

அதனை தொடர்ந்து மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டார்.