மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதிச்சனி விரத பூஜை


இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த புரட்டாதி சனி விரதம் இன்று ஆரம்பமாவதை முன்னிட்டு ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதி சனி விரதத்தினை முன்னிட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இந்த பூஜைகள் நடைபெற்றன.

இதன்போது சனீஸ்வரனுக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் அடியார்கள் விரதமிருந்து எள் எரிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

தோசங்களில் மிகவும் கடுமையான விரதமாக கணிக்கப்படும் சனீஸ்வர தோசத்தினை நீக்குவதற்காக இம்மாதம் வரும் நான்கு சனிக்கிழமைகளிலும் அடியார்கள் விரதமிருந்து சனீஸ்வரனை வழிபடுவது குறிப்பிடத்தக்கது.