வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 200வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபவனி


இலங்கையின் புகழ்பூத்த மற்றும் மிகவும் பழமையான பெண்கள் பாடசாலையாக கருதப்படும் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் 200வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபவனியொன்று இன்று காலை நடைபெற்றது. மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து மட்டக்களப்பு புனித வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் இலட்சினை பொறிக்கப்பட்ட வாகனத்துடன் நடைபவனி ஆரம்பமானது. 
இந்த நடைபவனியில் பாடசாலையின் பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள்,அதிபர்கள்,மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். 
1820ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு புனித வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையானது இலங்கையில் மிகவும் பழமையான பெண்கள் பாடசாலையென்பதுடன் புகழ்பூத்த பாடசாலையாகவும் இருந்துவருகின்றது. 

பல கல்விமான்களை உருவாக்கிய இந்த பாடசாலையின் 200வது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தருகில் ஆரம்பமான இந்த நடைபவனியானது மட்டக்களப்பு பிரதான வீதியூடாக நகரினை சென்றடைந்து அங்கிருந்து பாடசாலையினை சென்றடைந்தது. 
பல்வேறு கலாசார பண்பாடுகளை தாங்கியவாறும் பாடசாலையின் நினைவுகளை சுமந்தவாறும் இந்த நடைபவனி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.